சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கண்டிப்பாக் நடவடிக்கை எடுக்கப்படும்
ஜனாதிபதித் தேர்தலில் எங்கள் கட்சியின் உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம்
போட்டியிடுவதற்கும் கட்சிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. அவ்வாறு
தேர்தலில் போட்டியிடும் முடிவை கட்சி எடுக்கவும் இல்லை. அவரது முடிவிற்கும்
எங்கள் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆகையினால் எமது கட்சி கூடி
அவருக்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்
இவ்வாறு தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின்; தலைவரும் பாராளுமன்ற
குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் யாழில் ஊடகங்களுக்கு
தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசியக் கட்சிகளை இணைத்து ஐனாதிபதித் தேர்தலில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கும் இரண்டாம் சுற்றுச் சந்திப்பு யாழில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இச் சந்திப்பின் முடிவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலையே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்.. கட்சிக்கும் அவருக்கும் சம்மந்தமில்லை. அவர் கட்சியில் எந்தவொரு முடிவையும் கேட்காமலே தான் போட்டியிடுகின்றார்.
நிச்சயமாக கட்சி கூடி அவருக்கு எதிரான நடவடிக்கையை நாங்கள் எடுக்க இருக்கின்றோம். எமது கட்சிக்கும் சிவாஜிலிங்கம் எடுத்த முடிவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
சிவாஜிலிங்கம் கட்சியில் தான் வகித்த பதவிகளையும் இராஜினாமா செய்தள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனக்கு எதிராக கட்சி எடுக்கும் எந்த நடவடிக்கைகயையும் எதிர் கொள்ளத் தயார் என்றும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment