விடுதலைப் புலிகள் கட்சி கோட்டாவுக்கு ஆதரவு
கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு வரும் நிலைமையில் கிழக்கு
மாகாணத்தை கட்டிக்காக்க வேண்டிய, மீட்க வேண்டிய பொறுப்பு மிக்க அரசியல்
கட்சி என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் மக்கள் நலன் சார்ந்து தமிழ் மக்கள்
விடுதலைப் புலிகள் கட்சி ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷவை
ஆதரிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் பூ, பிரசாந்தன்
தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாவிக்கரை
வீதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி காரியாலயத்தில் இன்று
சனிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இவ்வாறு கட்சியின் செயலாளர்
பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில்
தமிழர்களின் இருப்பு, நிலம் நிர்வாகம் பொருளாதாரம் நிர்வாகம்
ஒடுக்கப்பட்டு வருகின்ற நிலைமையில் கிழக்கு மாகாணத்தை கட்டிக்காக்க வேண்டிய,
தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டிய, மீட்கவேண்டிய பொறுப்பு மிக்க
அரசியல் கட்சி என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் மக்கள் நலன் சார்ந்த தமிழ்
மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான வேட்பாளர்
கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிப்பது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சரவணன்

Post a Comment