கோட்டாவுடன் இணையவுள்ள ரணிலுக்கு நெருக்கமான நபர் சாகல ராத்நாயக்கவா?
இந்த நாட்களில் பொதுஜன பெரமுனவின் அரசியல் மேடைகளில் அதிகமாக பேசப்படுவது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமான பிரபல நபர் ஒருவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க உள்ளதாகவே.
அண்மையில் விஜேதாஸ ராஜபக்ஷ கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த பொதிலும், அவர் அப்போதிலிருந்தே மஹிந்த ராஜபக்ஷ தரப்புடனேயே ஒட்டியுள்ளார்.
அதன்படி தற்போது அரசியல் மேடைகளில் சேப்படும் பிரபல நபர் சாகல ரத்நாயக்க என்றே அறியக்கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்றில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது.
அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதுடன், ராஜபக்ஷக்களுக்கும் நெருக்கமானவர் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கடந்த கால்களில் ராஜபக்ஷ தரப்பினர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியாமைக்கு காரணமாகவும் சாகல ரத்நாயக்கவே இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment