Header Ads

பதுளை மற்றும் நுவரெலியா மாவட்ட மதுபான சாலைகளுக்கு பூட்டு




தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள எதிர்வரும் 27 ஆம் திகதி பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபான சாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் ஆகியோர் கலால் திணைக்கள ஆணையாளரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தீபாவளி தினத்தன்று மதுபான சாலைகளை மூடுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்டையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மதுபான சாலைகளில் தொழில் புரிகின்ற தொழிலாளர்களுக்கும் தீபாவளி தின விடுமுறையை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீபாவளியை கொண்டாடுகின்றவர்கள் ஆலயங்களுக்கு சென்று வருவதற்கும் அத்துடன் மது போதையில் வாகனங்களை செலுத்தி தேவையற்ற பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ளும் வகையிலுமே இந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய மதத்தவர்களின் முக்கிய நாட்களில் இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுவது போன்று தீபாவளி பொங்கள் நாட்களில் மதுபான கடைகளை மூடிவிடுமாறு பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.