சட்டத்தை மீறி சிக்கலில் மாட்டிக் கொண்ட ரூபவாஹினி தலைவர்
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர்
திருமதி இனோகா சத்தியங்கனி தேர்தல் சட்டங்களை மீறிய குற்றவாளிகள் எனக்
கண்டறிய அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் சட்டங்களை மீறி ஐக்கிய தேசிய
கட்சியின் மாநாட்டை தேசிய தொலைக்காட்சியின் ஊடாக நேரடியாக ஒளிபரப்பியதுடன்,
தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில் ஒளிபரப்பு இடையில்
நிறுத்தப்பட்டது.
ஆனால் தேர்தல் சட்டங்கள் ஏற்கனவே
அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு அரச ஊடக நிறுவனம் அத்தகைய தவறை மேற்கொண்டமை
ஒரு தீவிரமான விடயமாக இருந்தது.
அதன்படி, தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கையின் பேரில் பாதுகாப்பு அமைச்சகம் விசாரணைகளைத் தொடங்கியது.
இந்த விசாரணையை பாதுகாப்பு அமைச்சின் பணிப்பாளர் விஜிதா மாயதுன்னே மேற்கொண்டார்.
இந்த விசாரணை அறிக்கை ஜனாதிபதி செயலாளர்,
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிடம் 18 ஆம்
திகதி ஒப்படைக்கப்பட்டது.
திருமதி இனோகா சத்தியங்கனி தேர்தல் சட்டங்களை மீறிய குற்றவாளியாகக்
காணப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக உள்ளக தகவல் வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
Post a Comment