முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அழைப்பு
முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஆண்டி ஐயா புவனேஸ்
முல்லைத்தீவு
புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் அமைந்திருக்கின்ற அவருடைய
வீட்டிற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் குறித்த கடிதத்தை கையளித்து
சென்றுள்ளனர்
குறித்த
கடிதத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினால்
மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்றில் வாக்குமூலம் பெறவேண்டி இருப்பதனால்
புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் வசிக்கும் ஆண்டி ஐயா புவனேஸ்வரன் அவர்களை 24 10 2019 காலை 10 மணிக்கு இரண்டாம் மாடி ,புதிய செயலக கட்டிடம்
,கொழும்பு 1 எனும் முகவரியில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு
01 இன் பொறுப்பதிகாரி அவர்களை சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
என குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் ஆண்டி ஐயா புவனேஸ்வரன் அவர்கள்
எதற்காக தான் அழைக்கப்பட்டு இருக்கிறேன் என்பது தொடர்பாக தெரியாது எனவும், இது தொடர்பான தகவல்களை அறிய முடியாது
இருப்பதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக கடந்த மாதம் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிவாஜிலிங்கம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற
இனப்படுகொலை வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வு தொடர்பாக முல்லைத்தீவு
மாவட்டத்தின் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்கள் விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வகையில் இவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
சண்முகம் தவசீலன்

Post a Comment