காத்தான்குடி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
மட்டக்களப்பு மாவட்டம் - காத்தான்குடி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு மாதங்களாக நீர் கட்டணம் செலுத்தாதவர்களும் மற்றும் 1000 ரூபாவிற்கு மேற்பட்ட நிலுவைத் தொகையினை கொண்டிருப்பவர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2019.10.24ஆம் திகதிக்கு முன்னர் அவர்கள் தமது நிலுவையினை செலுத்தி நீர் துண்டிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் நீர் பாவனையாளர்களை இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் இந்த நடவடிக்கையானது, மட்டக்களப்பு பிராந்தியத்திலுள்ள ஏனைய நீர் வழங்கல் திட்டங்களிலும் இடம்பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment