Header Ads

அடுத்து வரும் நாட்களில் பல UNP பிரபலங்கள் மொட்டுடன் இணைவார்கள்



ஐக்கிய தேசிய கட்சியின் பிரபல உறுப்பினர்கள் பலர் எதிர்வரும் தினங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.
நேற்று சகோதரமொழி வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தினங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரபல உறுப்பினர்கள் எம்மோடு இணையவுள்ளனர். அதனால் அவர்களுக்கு தற்போது உள்ள பலத்தினையும் தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.   ஐ
ஐக்கிய தேசிய கட்சி சரிவுப் பாதையில் செல்வதை கட்சி ஆதரவாளர்கள் நன்கு அறிந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சேறு போடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, சிறைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு, இதனை சரி செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Powered by Blogger.