Header Ads

ஜனாதிபதி தேர்தலின் வெற்றியாளர் தொடர்பில் மைத்திரிக்கு கிடைத்துள்ள இரகசியக் கடிதம்





ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளர் யார் என்ற விடயம் தொடர்பில் அரசாங்க புலனாய்வு பிரிவினால் தயாரிக்கப்பட்ட புதிய இரகசிய அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் புலனாய்வு பிரிவின் கருத்து கணிப்பில் ஈடுபட்ட சிலர் அரசியல் கருத்துக்களை தெளிவாக வெளியிடுவதற்கு விருப்பம் காட்டவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

குறித்த அறிக்கைக்கு அமைய பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகிய இருவருக்கும் இடையிலான 50 - 50 என்ற சமநிலையான கடும் போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எப்படியிருப்பினும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவினால் தயாரிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான பல்வேறு அறிக்கைகள் முற்றிலும் பிழையானதென தகவல் வெளியாகியுள்ளது.

Powered by Blogger.