இன்று வௌியாக உள்ள ரணிலின் விஷேட அறிவிப்பு
இன்று விசேட அறிவிப்பின் பின்னர் பிரதமரும், அரசாங்கமும் பதவி விலகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றிருந்தது.
ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தோல்வியடைந்தார். இதனால், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சியின் பிரதி தலைவர் பதவியை அவர் இராஜினாமா செய்திருந்தார்.
இந்த நிலையில், விரைவில் பொது தேர்தல் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்ற நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என்ற கோரிக்கை பலராலும் முன்வைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே, இன்றைய தினம் பிரதமர் பதவி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகும் வரையில் தற்போதைய அமைச்சரவை தொடரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment