தேர்தல் பிரச்சாரத்துக்காக இரண்டு வாரங்களில் பாரிய தொகையை செலவிட்டுள்ள கோட்டா
பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் இரு வார பிரச்சாரத்திற்காக சுமார் 100 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக தேர்தல் வன்முறை தொடர்பில் ஆராயும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டிற்கமைய இந்த பணம் செலவிடப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதாக நிலையத்தின் தேர்தல் செலவு கண்கானிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 57 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதுடன் ஐக்கிய தேசிய முன்னணி 37 கோடி ரூபாவை செலவிட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி 1.6 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வமாக மதிப்பிடப்பட்ட தகவல்களுக்கமைய இந்த விபரம் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரச்சார நடவடிக்கைகக்காக ஏற்கனவே கணக்கிடப்பட்ட தொகையை விடவும் பாரிய அதிகரிப்பாகும். இந்தத் தொகை மேலும் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment