Header Ads

எட்டியாந்தோட்டை தமிழர்கள் மீதான தாக்குதல் - உடனடி விசாரணைக்கு உத்தரவிட்ட மஹிந்த





எட்டியாந்தோட்டை , கனேபொல தோட்டத்தில் நேற்று நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை நடத்துமாறு சபரகமுவ மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரை பணித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச .

இன்று காலை அப்பகுதி எம் பி கனக ஹேரத் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொலைபேசி ஊடாக பேச்சு நடத்திய மஹிந்த இந்த பணிப்பை விடுத்தார்.

இதற்கிடையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் சிங்கள ஒருவருடன் தமிழர் ஒருவர் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான பிரச்சினையே பின்னர் கைகலப்பாக மாறி அரசியல் ரீதியாக சாயம் பூசப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன.

Powered by Blogger.