Header Ads

ஜே. ஸ்ரீரங்காவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்



முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா உட்பட 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தொடர்ந்துள்ளார்.

2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி ஸ்ரீரங்கா ஓட்டிச் சென்ற பதிவு செய்யப்படாத மோட்டார் வாகனமொன்று செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு அருகில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகவே இந்த வழக்கை சட்டமா அதிபர் தொடர்ந்துள்ளார்.

இந்த சம்பவத்தின் போது கவனமின்றி, வேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்தை வேறு ஒருவர் செய்தார் என்று காண்பிக்க சூழ்ச்சி செய்தமை தொடர்பாகவும் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்காவை தவிர, வவுனியா முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், வவுனியா முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 5 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்டமா அதிபர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

Powered by Blogger.