மிரிஹான தடுப்பு முகாமில் இருந்த 30 வௌிநாட்டவர்களை காணவில்லையாம்
மிரிஹானவில் உள்ள வெளிநாட்டவர்களை தடுத்து வைக்கும் தடுப்பு முகாமில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினர் நேற்று மேற்கொண்ட திடீர் தேடுதலில் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 ஆபிரிக்க பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், மிரிஹான பொலிஸ் தலைமையக அதிகாரிகள், விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் உட்பட 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த தேடுதலை நடத்தியுள்ளதுடன் நேற்று காலை முதல் சில மணி நேரம் இந்த தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் போன 30 ஆபிரிக்க பிரஜைகளில் அதிகமானோர் நைஜீரிய பிரஜைகள் என தெரியவந்துள்ளது.
காணாமல் போயுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய மிரிஹான பொலிஸாரின் உதவியுடன் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Post a Comment