Header Ads

1962ம் ஆண்டின் பின்னர் உலகில் ஏற்டுகின்ற பெரிய மாற்றம் - இதனால் நடப்பது என்ன?


இன்று முதல் 3 நாட்களுக்கு 6 கிரகங்கள் ஒன்று சேருகிறது. இதனால் பாதிப்பு ஏற்படுமா? என்ற அச்சம் பலருக்கு எழுந்துள்ளது.


ஜோதிடத்தின்படி தனுசு ராசியில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 3 நாட்கள் (27-ந் தேதி வரை) சூரியன், சந்திரன், குரு, சனி, புதன் மற்றும் கேது ஆகிய 6 கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து ராகுவின் பார்வையை பெறுகிறது என்றும் இதன் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ஜோதிடர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இதன் காரணமாக 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்பட போகும் மாற்றங்கள் குறித்து ஜோதிடர்கள் பலன்களை கணித்து வெளியிட்டு உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஆனால் ஜோதிடர்களின் கருத்தை விஞ்ஞானிகள் நிராகரித்து உள்ளனர். “கோள்கள் இணைவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக ஆதாரம் எதுவும் இல்லை” என்று சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.

கோள்கள், சூரியனை தங்கள் சுற்றுப்பாதையில் சுற்றி வருகின்றன. இதுபோல கோள்கள் அவ்வப்போது ஒன்று சேருவது அவ்வப்போது நிகழும். இது பூமியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

இப்போது 6 கிரகங்கள் ஒன்று சேருவது போல கடந்த 1962-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை ராகு தவிர மற்ற 8 கிரகங்கள் மகரராசியில் ஒன்று சேர்ந்தன. அப்போது உலகம் அழிந்து விடும் என்று ஒரு சில ஜோதிடர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் ஒரு சில ஜோதிடர்கள் அதனை மறுத்தும் இருக்கிறார்கள். என்றாலும் அந்த காலக்கட்டத்தில் கிரக சேர்க்கை அன்று கோவில்களில் இரவு முழுவதும் பூஜைகள் நடத்தி இருக்கிறார்கள்.
Powered by Blogger.