Header Ads

இலங்கையர்கள் நாளை சூரிய கிரகணத்தை தௌிவாக பார்க்கலாம்

இலங்கையில் தெளிவாகப் பார்க்கக் கூடிய சூரிய கிரகணம் ஒன்று நாளை (26)  இடம்பெறவுள்ளதாக இலங்கை விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.


2010 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதிக்குப் பின்னர், இந்தச் சூரிய கிரகணத்தைப் பார்க்கக்கூடிய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

இலங்கை நேரப்படி, காலை 8.09 முதல் 11.25 வரையான மூன்று மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் இக்கிரகணம் நிகழுகின்ற போதிலும் காலை 9.35 முதல் காலை 9.37 வரையான காலப்பகுதியே உச்ச நிலையாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாளை இடம்பெறும் இந்த கங்கண, பகுதியளவிலான சூரியக் கிரகணம் இலங்கையின் ஊடாகப் பயணிக்கும் போது பூமியின் மேல் விழும் சந்திரனின் முழுமையான நிழல் 128 கிலோ மீற்றர்கள் விட்டத்தைக் கொண்டிருக்கும்.

அதாவது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும்.

இதன்போது சாதாரண கண்களில் சூரியனை காண்பது கடினம். எனவே, இந்த வளையத்தை நேரடியாக பார்க்கக் கூடாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


அது கண்களின் விழித்திரையை பாதிக்கும். மேலும் சந்திரன் சூரியனை கடந்து செல்லும் இறுதி நிமிடங்கள் மிகவும் கடுமையாக காட்சி அளிக்கும். அப்போது சூரிய ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடியுடன் சிவப்பு நிறத்தை ஓரளவு காண முடியும்




புவியின் சுழற்சி காரணமாக பூமியின் மேற்பரப்பின் மேல் வேகமாகப் பயணம் செய்வதோடு அதன் பயணப்பாதை இலங்கையின் வடபகுதி ஊடாக அமைந்திருக்கும்.

மன்னார் முதல் திருகோணமலை வாகரை வரை வரையப்படும் கோட்டிக்கு மேலாக யாழ்ப்பாணம் வரை உள்ளவர்களுக்கு இச்சூரிய கிரகணத்தை தெளிவாகவும் அதன் கீழான காலி, ஹம்பாந்தோட்டை வரை உள்ளவர்களுக்கு பகுதியளவிலும் பார்க்கக்கூடியதாக இருக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்ணியல் விஞ்ஞான மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரட்ண தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பகுதியளவிலான சூரிய கிரகணத்தை காலை 8.09 மணியளவிலும் காலை 9.35 முதல் 9.37 வரையான காலப்பகுயில் கங்கண சூரிய கிரணத்தை அவதானிக்கலாம்.

கொழும்பு நகரில் காலை 8.10 தொடக்கம் பகுதியளவிலான சூரிய கிரகணத்தை பார்க்கலாம். காலியில் காலை 8.11 முதல் அவதானிக்கலாம். அவ்வேளை சூரியன் சந்திரனால் 87.6 வீதம் மறைக்கப்படும். சூரிய கிரகணம் முற்பகல் 11. 22 முடிவுறும் எனவும் அவர் கூறினார்.

இந்த சூரிய கிரகணத்தை அவதானிக்கவென வடபகுதியில் மாத்திரம் சுமார் எட்டு தொலைநோக்கு காட்டிகள் அமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளைய சூரிய கிரகணம் வளைவு சூரிய கிரகணம் (annular solar eclipse) என்றும் சொல்லப்படுகிறது.


Powered by Blogger.