Header Ads

ராஜித எப்போது கைது செய்யப்படுவார்?


முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணையை நேற்று பிறப்பித்தது.


கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனிய இந்த பிடியாணையை பிறப்பித்தார்.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமையவே, இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், சி.ஐ.டியினரால், ராஜித சேனாரத்ன எம்.பி, எந்தநேரத்திலும் கைது செய்யப்படலாம். அவரை கைது செய்வதற்காக, சி.ஐ.டியினர் கொழும்பிலும் களுத்துறையிலும் வலைவிரித்துள்ளனர் என அறியமுடிகின்றது.

இதேவேளை மகசின் சிறைச்சாலயில் இதற்காக விசேட சிறை அறை ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறை அறையை நேற்று மாலை அதனை சுத்தப்படுத்தியுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சிறைச்சாலையில் தடுத்து வைக்கும் போது இந்த விசேட சிறைக்கூடமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

Powered by Blogger.