இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான நபர்
இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான மற்றும் பக்கச்சார்பான நபராக தற்போதைய சபாநாயகர் கரு ஜெயசூரியவை சுட்டிக்காட்ட முடியும் என்று உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துரு ஹெல உறுமய கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
சபாநாயகரின்பக்கச் சார்பு காரணமாக, நாடாளுமன்றத்தின் மேலாதிக்கமும், சபாநாயகரின் அந்தஸ்தும் குறைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பட்டளி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டதை அடுத்து அவருக்காக நடத்தப்பட்ட போதி பூஜையில் சபாநாயகர் பங்கேற்றுள்ளார்.
அத்துடன் சபாநாயகர் சிறைக்குச் சென்று சம்பிக்க ரணவக்கவைச் சந்தித்துள்ளார்.
இவரின் இந்த செயற்பாடுகளால் இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான மற்றும் பக்கச்சார்பான நபராக அவரை கூற முடியும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Post a Comment