சம்பிக்க ரணவக்க தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணை
முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க மீதான குற்றச்சாட்டு தொடர்பில் அப்போது கொழும்புக்கு பொறுப்பாக இருந்த தற்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்ச்சைக்குறிய குறித்த விபத்து தொடர்பான சிசிடிவி காணொளிகள் சம்பிக்க ரணவக்க மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இடையிலான உடன்பாட்டுக்கு அமைய அழிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
அதேநேரம் அவரின் உத்தரவுப்படி பொலிஸ் சாட்சிப் பதிவுகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது சம்பந்தமாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு விளக்கமளித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

Post a Comment