Header Ads

தன் குடும்ப உறுப்பினர்களுக்காக மைத்திரி புதிய அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை



ஜனாதிபதி தேர்தலுக்கு பின் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் விசேடமான நிபந்தனைகள் இரண்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலசுகவின் தலைவராக அந்த நிபந்தனைகளை தனக்கு அந்த ஒப்பந்தத்தில் இணைக்க இயலாவிட்டாலும் ஸ்ரீலசுகவின்  ஆதரவை வழங்குவதாயின் கட்டாயமாக அந்த நிபந்தனைகள் இரண்டிற்கும் இணக்கம் தெரிவிக்க  வேண்டும்  என மைத்ரிபால  சிறிசேன தன்னுடன் கலந்துரையாட வந்த ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதில் முதல் நிபந்தனை ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்தின் தலைவராக தன்னை நியமித்து, தனது சகோதரர் குமாரசிங்க சிறிசேனவை தொடர்ச்சியாக அந்த பதவியில் வேலை செய்ய அனுமதி வழங்குதல்.

இரண்டாவது நிபந்தனையாவது தேசிய சேமிப்பு வங்கி உள்ளிட்ட பல அரச நிறுவனங்களினால் தனது மகளான சதுரிகா சிறிசேனவுக்கு சொந்தமான பிரச்சார நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பிரச்சார நடவடிக்கைக்கான ஒப்பந்தங்களை புதிய அரசாங்கத்தின் கீழ் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ச்சியாக வழங்குவதே.

இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வகையில் டெலிகாம்  தலைவருக்கு அந்த பதவியிலேயே தொடர்ச்சியாக இருக்க இடமளிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு  அந்த அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றவுடனே அறிவித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய தனது பதவியின் இறுதி நொடி வரை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கட்சியின் எதிர்காலம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் புறம்தள்ளி அன்பான தந்தையாகவும் அன்பான சகோதரராகவும் விளங்கியுள்ளதாக தெரிகிறது.

Powered by Blogger.