ஓய்வு பெற்றால் இவை அனைத்தையும் தனக்கு வழங்கவும் - ரணில் வழங்கியுள்ள பட்டியல்
தான் ஓய்வு பெற்ற பின்னர் முன்னாள் பிரதமர் ஒருவருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து வரரப்பிரசாதங்களையும் தனக்கு வழங்குமாறு ரணில் விக்ரமசிங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்று இந்த செய்தியை வௌியிட்டுள்ளது.
புல்லட் ப்ரூவ் வாகனம், 200 பொலிஸ், இராணுவத்தினர் 17 பேர், 8 வாகனங்கள், பொலிஸுக்கு தனியாக 9 வாகனங்கள், அம்பியுலன்ஸ், பிரத்தியேக டாக்டர், தாதிமார், உத்தியோகபூர்வ வாசஸ்தலம், பணியாட்கள்” உட்பட பல வசதிகளை அவர் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் சமகால தலைவரும் முன்னாள் பிரதருமான ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதற்றகமைய ஓய்வு பெற்ற பிரதமருக்கு வழங்கப்படும் சலுகைகளை தங்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜக்ஷவிடம் ரணில் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Post a Comment