Header Ads

ரணிலுக்கு இந்த வாரம் மட்டுமே அவகாசம்



ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க விரைவாக எதிர்க் கட்சித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவிற்கு வழங்க வேண்டும் என அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை ரணில் விக்ரமசிங்க ​நேற்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் பீடாதிபதிகளை சந்தித்து ஆசிப்பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டாரவின் கொழும்பில் அமைந்துள்ள இல்லத்தில் நேற்று கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுஜிவ சேனசிங்க எதிர்க் கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம் ஒன்றிற்கு வந்துள்ளதாக கூறினார்.

இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் துஸார இந்துனில் எதிர்வரும் வியாழக்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் கட்சி குழு கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அவற்றில் சஜித் பிரேமதாச தொடர்பில் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நிறைவேற்றப்படும் என ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.


இதேவேளை எதிர்க் கட்சித் தலைவர் பதவி சஜித் பிரேமதாசவிற்கு, ரணில் விக்ரமசிங்கவால் வழங்கப்படும் என நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பாராளுமன்றம் கூட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார
தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கான சிறந்த இடம் பாராளுமன்றம் எனவும் அதனை பிற்போடுவதால் நாட்டின்
பிரச்சினைகளில் இருந்து விலகி செல்ல முற்படுவது புலப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை எதிர்க் கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று பல்வேறு சந்தர்பங்களில் கருத்து தெரிவித்தனர்.

அதற்கமைய கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா தான் அறிந்ததற்கு அமைய ரணில் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்வுள்ளதாகவும் அதற்கு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கூறினார்.


இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஸ டி சில்வா கட்சிக்கு சிறந்த ஆலோசகர் ஒருவர் தேவைப்படுவதாக
தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ கட்சிக்குள் இரண்டு குழுக்கள் இல்லை என கூறினார்.

தான் தற்போதும் ஐக்கிய தேசியக் கட்சி என்ற அணியை சேர்ந்தவன் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த நளின் பண்டார கட்சி புத்துயிர் பெறுவதற்கு தான் உள்ளிட்டவர்கள் பொறுத்தமற்றவர்கள்
எனின் தாங்களை விலக்கிவிட்டு கட்சி முக்னோக்கி பயணிக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு என தெரிவித்தார்.

அவருக்கு இந்த வாரத்தை மாத்திரம் வழங்குவதாக தெரிவித்த அவர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ரணில் விக்ரமசிங்க தீர்மானிக்க வேண்டும் எனவும் கூறினார்.

இதன் பின்னணியில் ராஜபக்க்ஷக்கள் இருப்பதாகவும் குற்றம் சுமத்தினார்.


கேள்வி : சிறிகொத்தாவில் நடைபெறும் ஊடக சந்திப்பில் கலந்துக்கொள்ளுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா?

ஹரின் பெர்ணான்டோ : கட்சிக்குள் சிறு சிறு முரண்பாடுகள் எப்போதும் காணப்பட்டன. அந்த வகையில் தற்போதைய முரண்பாட்டு
நிலைமைக்கும் விரைவில் தீர்வு அவசியம்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மல்வத்து பீட பீடாதிபதி ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து
ஆசிப்பெற்றுக்கொண்டார்.

அதன்பின்னர் அவர் அஸ்கிரிய பீட பீடாதிபதி வரக்காதகொட ஞானரத்தன தேரரையும் சந்தித்து ஆசிப்பெற்றுக் கொண்டார்.

எவ்வாறாயினும் மாநாயக்க தேரர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில்
நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் அறிக்கையிட ஊடகவியலாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் நாளை (05) இடம்பெறவுள்ளது.

கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது எதிர்க் கட்சித் தலைவர் பதவி குறித்து பொது இணக்கப்பாடு எட்டப்படவுள்ளது.

அத்துடன் கட்சியின் எதிர்க்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.



Powered by Blogger.