இலங்கையில் பூனையை கொலை செய்த மாணவனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பூனை ஒன்றை பொல்லால் தாக்கி கொலை செய்த சம்பவத்தின் சந்தேகததில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவன் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து 05 இலட்சம் ரூபாவான சரீர பிணையில் மாணவனை விடுவிக்க நீதவான் சந்தன கலங்சூரிய உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 17ம் திகதி இந்த சம்பவத்தின் பின்னர் குறித்த சிறுவன் மற்றும் பெற்றோர் பிரதேசத்தில் இருந்து வௌியேறி, 06 நாட்களின் பின்னர் பொலிஸில் சரணடைந்ததாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
குறித்த பூனையை செல்லப் பிராணியாக வளர்க்கும் பெண் ஒருவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
குறித்த பூனை தோட்டத்திற்கு வந்ததனால் குறித்த மாணவன் பூனை மீது தாக்குதல் நடத்தி பின்னர் காயங்களுடன் கொண்டு வந்து பாதையில் வீசியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment