Header Ads

சிங்கள பௌத்த அரசாங்கம் என்றால் வடக்கு கிழக்கில் போட்டியிட கூடாது

நாட்டின் தற்போதைய அரசாங்கம் எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் உருவாக்க போவது சிங்கள பௌத்த அரசாங்கம் என்றால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

எம்.சீ.சீ உடன்படிக்கையில் கைச்சாத்திட அரசாங்கம் பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் தயாராகி வருகிறது. தேர்தல் மேடைகளில் இந்த உடன்படிக்கை குறித்து பெரியதாக கோஷமிட்டனர்.

தற்போது எம்.சீ.சீ. உடன்படிக்கை பற்றி சாதகமான கதைகளை பேசி வருகின்றனர்.

தற்போது அரசாங்கம் செய்து வருவது தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை அல்ல எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.