Header Ads

சந்தையில் அரிசி விலை அதிகரிப்பு



சந்தையில் நாட்டரிசி மற்றும் வெள்ளை பச்சை அரிசி ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அந்த அரிசி வகைகளுக்கான விலை சடுதியாக அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தையில் இந்த வகை அரிசுக்கு பெருமளவு கேள்வி அதிகரித்துள்ளதாலும் சந்தைக்கு அரிசி வகைகள் கொண்டுவரப்படாதாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு சந்தையில் ஏற்பட்டுள்ள அரசி தட்டுப்பாடு தொடர்பில் உள்ளக வர்த்தக மற்றும் நுகர்வோர் நலன்புரி இராஜாங்க அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் அததெரண வினவியது.

இதற்கு பதிலளித்த அவர் நிலவும் அரசி தட்டுப்பாடு தொடர்பில் வாழ்க்கைச் செலவு குழுவுடன் கலந்துரையாடி தீர்வை வழங்க எதிர்பார்ப்பதாக கூறினார்.

Powered by Blogger.