Header Ads

ரணிலின் பாதுகாப்பை அதிகரிக்க கோரிக்கை



ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு குறித்து அவரின் செயலாளர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.


இதன்படி கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் ரணிலுக்கு வழங்கப்படவேண்டுமென அவர் அந்த கடிதத்தில் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரின் இந்த கோரிக்கையை பரிசீலித்துள்ள பிரதமர் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறாரென பிரதமர் அலுவலக வட்டாரம் தெரிவித்தது.

Powered by Blogger.