பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியாவிலும் களுத்துறையிலும் முரளி - டில்சான்?
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்கள் உள்ளிட்ட பிரபலமானவர்கள் சிலர் அடுத்த பொது தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் அதிகமானோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதற்கமைய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடத் தயாராக உள்ளார்.
அவரை வட மாகாண ஆளுநர் பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாரான நிலையில் அது தொடர்பாக சில சந்தர்ப்பங்களில் பரிந்துரைக்கப்பட்டது. எவ்வாறாயினும் அவர் தொடர்ச்சியாக குறித்த பதவியை ஏற்க தயாராக இல்லை என தெரிவித்திருந்தார்.
அதன்பின் அவருக்கு பொது தேர்தலுலில் போட்டியிடுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், முரளி அந்த பரிந்துரைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதுடன், நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பான்மையான ஆதிக்கம் UNPயின் அரசியல் முகாமாக உள்ளதுடன், வடக்கு கிழக்கு இல்லாமல் கடந்த ஜனாதிபதி தேர்தலில் UNP ஆதரவு வழங்கிய வேட்பாளர் வெற்றிப்பெற்றதுடன் நுவரெலியா மாவட்டம் மட்டுமே.
அடுத்த பொது தேர்தலில் முரளிதரன் மூலம் UNPயின் தேர்தல் தளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது பொதுஜன பெரமுன தலைவர்களின் நோக்கமாகும்.
இதற்கிடையில் முன்னாள் வீரர் டி.எம். டில்ஷான் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட தாயாக உள்ளார். அவர் சில சந்தர்ப்பங்களில் தான் அரசியலுக்கு வருவதாகவும், அடுத்த பொது தேர்தலில் செயல்பாட்டு அரசியலுக்கு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு மேலதிகமாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக தீவிரமாக ஈடுபட்டிருந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் ஏராளமானோர் பொதுத் தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறார்கள்.

Post a Comment