Header Ads

மைத்திரி ஆசையோடு கேட்டுப் பெற்ற மாளிகை கைவிட்டுப் போகும் நிலையில்?



முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பயன்படுத்தும் இல்லமும் அவருக்கு இல்லாமல் போகும் சூழ்நிலை உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


கொழும்பு 07, பெஜெட் வீதியில் அமைந்துள்ள இந்த உத்தியோகபூர்வ இல்லமானது மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு ஜனாதிபதி ஒருவரின் பாவனைக்காக அரச இல்லங்கள் இரண்டை ஒன்றாக்கி உருவாக்கப்பட்ட  பெரிய மாளிகையாகும்.

அதேபோல இது ஜனாதிபதி ஒருவரினது பாவனைக்காக கோடிக்கணக்கான மக்கள் பணத்தை செலவு செய்து ஆடம்பர வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட மாளிகையாகும்.


ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள் ஒரு உத்தியோகபூர்வ இல்லத்தை  கொண்டுள்ளதுடன், மைத்ரிபால சிறிசேன தனது பதவிக் காலத்தின் கடைசி மாதத்தில் ஓய்வு பெற்ற பின்னர் அதே மாளிகையைப் பயன்படுத்த அமைச்சரவை ஒப்புதலைப் பெற்றார்.

இருப்பினும் அமைச்சரவையில் அனுமதியை ஒழுங்குமுறையில் பெறவில்லை என்பதால் செல்லுபடியாகும் தன்மை குறித்து பிரச்சினை எழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ஓய்வுபெற்ற ஜனாதிபதி ஒருவருக்கு பொருத்தமான வசதியுடன் வேறு ஒரு தனியான இல்லத்தை மைத்ரிபால சிறிசேனவுக்கு வழங்கி இந்த இல்லத்தை  வேறு சில பயனுள்ள நோக்கங்களுக்காக பயன்படுத்துவதையும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



Powered by Blogger.