Header Ads

O/L பரீட்சை எழுதும் ரஞ்சன் ராமநாயக்க



நடைபெற்று வரும் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பரீட்சை எழுதியுள்ளார். சட்டத்தரணியாகும்


சட்டத்தரணியாகும் எதிர்பார்ப்பில் நேற்றைய தினம் ஆங்கில பரீட்சை எழுதியுள்ளார்.

கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் ரஞ்சன் ராமநாயக்க தோற்றினார். அவர் சட்டத்தரணியாகும் கனவை நனவாக்கிக் கொள்ளும் நோக்கில் பரீட்சை எழுதியுள்ளார்.

சட்டத்தரணியாக கற்பதற்கு ஆங்கில பாடத்தில் குறைந்த பட்சம் "C" சித்தி பெற்றிருக்க வேண்டும். இதனடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்க நேற்று சாதாரண தர பரீட்சையில் ஆங்கில பரீட்சைக்கு முகம்கொடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, உயர்ந்த நிலையில் இருந்த போதிலும் தனது எதிர்காலத்திற்காக பரீட்சை எழுதியுள்ளார். இது பலபேருக்கு முன்னுதாரணமாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Powered by Blogger.