Header Ads

சட்டம் சகலருக்கும் சமமாகவே செயற்படுத்தப்படும்


சட்டம் சகலருக்கும் சமமாகவே செயற்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


வாத்துவ பிரதேசத்தில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சமூக வலையமைப்பு செயற்பாட்டாளர்களின் ஒன்றியத்துடன் இன்று (22) இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

இன்றைய நாட்களில் நாமே மாட்டிக் கொள்கின்றோம். இருப்பினும், யாரை பிடித்துச் சென்றுள்ளனர் என்பதை யாரும் தேடிப்பார்ப்பதில்லை. எம்மைச் சேர்ந்தவர்களை அரசியல் காரணங்களுக்காக அழைத்துச் சென்றுள்ளனர் என்றே சம்பந்தப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

பாதையில் செல்லும் ஒருவரை மோதி காயப்படுத்தி விட்டுச் சென்ற ஒருவரை கைது செய்வது அரசியல் காரணமாக மாட்டாது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு யாரும் அடித்தால் நான் பொலிஸில் முறைப்பாடு செய்கின்றேன். அது அரசியல் நடவடிக்கை அல்லவே. கடந்த அரசாங்கம் அமைச்சர்களைப் பாதுகாப்பதற்கு ஒவ்வொரு நடவடிக்கையையும் முன்னெடுத்தது.

இன்று சட்டம் சரியாக செயற்படுத்தப்படுகின்றது. இதன்போது, சம்பிகயா, ராஜிதவா, ரணிலா, மஹிந்தயா என்பது பார்க்கப்படுவதில்லை. சகலருக்கும் சமமான முறையில் சட்டம் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார். 
Powered by Blogger.