Header Ads

சிவப்பு சாயம் பூசப்பட்ட சம்பா அரிசி சந்தையில்



பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வவுனியா வர்த்தக நிலையங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


அந்த வகையில் வவுனியா - மன்னார் வீதியில் அமைந்திருந்த பல வர்த்தக நிலையங்களில் நேற்றைய தினம் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன்போது வேப்பங்குளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சாயம் பூசப்பட்ட சிவப்பு சம்பா அரிசி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த அரிசியை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் பரிசோதனை செய்ததுடன், மேலதிக பரிசோதனைக்காக மூன்று பொதிகளில் அரிசி மாதிரிகள் பெறப்பட்டு சீல் செய்யப்பட்டு எடுத்து செல்லப்பட்டுள்ளன.

அத்துடன், கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் நிர்ணய விலையை விட கூடிய விலைக்கு குறித்த அரிசிகளை விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, அதிக விலையை காட்சிப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக 9 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.