Header Ads

போக்குவரத்து துறையில் ஏற்படப் போகும் மாற்றம்

அரசு மற்று தனியார் பஸ்களில் முற்கொடுப்பனவு அட்டையினை பயன்படுத்திப் பயணிப்பதற்கான புதிய திட்டமொன்றினை நடைமுறைக்குக் கொண்டு வரவுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 


நேற்றைய தினம் கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை அடுத்த வருடம் 2020 இல் இருந்து புதிதாக 8 ரயில்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இவற்றில் 4 ரயில்கள் அடுத்த மாதம் சேவையில் ஈடுபடுத்தப்படும். ரயில் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான பணிகளைத் துரிப்படுத்துவதற்கு நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ரயில் சேவை தொடர்பான நேர அட்டவணை அனைத்து ரயில் நிலையங்களிலும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதற்காக இலத்திரனியல் பெயர்ப்பலகை பயன்படுத்தப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

இதுதவிர கொழும்பு கோட்டை - தலைமன்னாருக்கிடையிலான தபால் ரயில்சேவையை மீண்டும் சேவையில் ஈடுபத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
Powered by Blogger.