Header Ads

பெட்டிக்கலோ கெம்பஸை அரசுடமையாக்க முயற்சி

மட்டக்களப்பு மாவட்டத்தின் புணாணை பகுதியில் அமைந்துள்ள பெட்டிக்கலோ பல்கலைக்கழகத்தை அரச உடமையாக எடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் தொடர்பில் கடந்த காலங்களில் அதிகமாக பேசப்பட்டன.

இந்த பல்கலைக்கழகம் சவுதி அரேபியாவிடம் இருந்து கிடைத்த 300 கோடி ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் அந்த பணம் கிடைத்த முறை தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட நாடாளுமன்ற விசேட தெரிவு குழுவின் பரிந்துரைக்கமைய இந்த பல்கலைக்கழகத்தை அரசாங்கத்திற்கு எடுத்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதற்கமைய அந்த பல்கலைக்கழகத்தை அரச உடமையாக எடுத்துக் கொள்ளும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Powered by Blogger.