சஜித்துக்கு ஆதரவு வழங்கிய 20 பேரை விலக்க தீர்மானம்
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவை மீறி சஜித் பிரேமதாசவை ஆதரித்த 20 ஸ்ரீலசுக உள்ளூராட்சி உறுப்பினர்களின் உறுப்புரிமையை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ.ல.சு.க. தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஸ்ரீ.ல.சு.க மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று விசாரணைகள் நடத்திய பின்னர் அவர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக அடுத்த பொதுத்தேர்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் பொதுஜன பெரமுனவுடன் உருவாக்கப்பட்ட கூட்டணி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக ஸ்ரீ.ல.சு.க.வில் இருந்து வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோல்களும் பரிசீலிக்கப்படுகின்றன.

Post a Comment