Header Ads

பதுளை வைத்தியசாலையில் சீனப் பிரஜை உயிரிழப்பு

பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த சீன இனத்தைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


பதுளை–பசறையில் வோன் சீமன் என்ற 69 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையில் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இது குறித்து பதுளை அரசினர் மருத்துவமனை பிரதி வைத்திய அதிகாரி  வைத்தியர் ரன்ஜித் அமரகோன் தெரிவிக்கையில்,

“குறித்த நபர் கடந்த 27 ஆம் திகதி மேற்படி நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரதுமரணத்தையடுத்து,எவரும் வீணாக பீதியையும், பதட்டத்தையும் அடையத் தேவையில்லை. மரணமானவரின் சடலம் குறித்தசட்டப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.”  என தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.