Header Ads

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஓத வேண்டிய விஷேட மந்திரம்

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ‘ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா’ என்ற மந்திரத்தை ஓதுமாறு என திபெத்திய புத்தமதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.


சீனாவில் உள்ள புத்தமதத்தை பின்பற்றும் சிலர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அறிவுரை வழங்கும்படி இமாச்சல பிரதேசம் மாநிலம் தரம்சாலாவில் உள்ள திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவுக்கு முகநூல் மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்கள் ‘ ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா’ என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து மன அமைதி மற்றும் கவலையில் இருந்து விடுபடலாம். இந்த மந்திரத்தை உச்சரித்தால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி நன்மையை அளிக்கும், என தலாய் லாமா தெரிவித்தார்.

மேலும், அந்த மந்திரத்தை அவர் உச்சரிப்பது போன்ற வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
Powered by Blogger.