Header Ads

ரணிலின் அதிரடி அறிவிப்பு - சண்டித்தனத்தால் என்னை அனுப்ப முடியாது

கட்சி தலைவர் பதவியை விட்டு போகத் தயாராக இருப்பதாகவும், சண்டித்தனத்தில் தன்னை அனுப்ப முடியாது என்ற செய்தியை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, இன்று சஜித் பிரேமதாசவுக்கு அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து தான் விலகிச் செல்வது கால அட்டவணைக்கு அமைய நடக்கும் என்பதையும் அந்த செய்தியில் உள்ளடக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சஜித் பிரேமதாசவுக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது பிரபல அரசியல்வாதிகள், எதிர்பாராத ஒரு அரசியல்வாதி ஊடாக ரணில் இந்த செய்தியை அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அரசியல்வாதிக்கும், ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சில தினங்களுக்கு முன்னர் இது சம்பந்தமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.