Header Ads

மின்சார சபைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

முறையான மின் உற்பத்தி திட்டங்களை வகுக்காத காரணத்தினால் இலங்கை மின்சா சபை இந்த ஆண்டு 120 பில்லியன் ரூபாவரை நஷ்டத்தை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி, சக்திவலு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.


கடந்த அரசாங்கம் 2017 ஆம் ஆண்டு முதல் மின்சாரம் தொடர்பான எந்தவொரு திட்டத்தையும் முறையாக வகுக்காத காரணத்தினால் கடந்த ஆண்டு அரசாங்கம் இலங்கை மின்சார சபைக்கு 85 பில்லியன் ரூபா இழப்பை சந்தித்ததாகவும் அவர் கூறினார்.

இந் நிலையில் இலங்கை மின்சார சபையை நஷ்டத்திலிருந்து மீட்க்கும் முயற்சியில் அரசாங்கம் புதிய திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் மின்சக்தி, சக்திவலு அமைச்சு தெரிவித்துள்ளது.
Powered by Blogger.