Header Ads

ரணிலின் தீர்மானம் சஜித்துக்கு அறிவிக்கப்பட்டது

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் தீர்மானித்துள்ள அதேசமயம் கட்சித் தலைமையை வழங்காதிருக்கவும் முடிவு செய்துள்ளார்.


இதன்படி கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நடந்த கட்சியின் சம்மேளனத்தில் தீர்மானித்தவாறு 2025 ஆம் ஆண்டுவரை கட்சித் தலைவராக பதவி வகித்து அதன் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெறவும் ரணில் தீர்மானித்துள்ளார்.

ரணிலின் இந்த தீர்மானம் சஜித்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சஜித் தரப்பு அரசியல் கூட்டணி ஒன்று அமைத்தால் ஐக்கிய தேசியக் கட்சி அதனுடன் இணையாமல் தனியே யானைச் சின்னத்தில் போட்டியிடுமென அறியமுடிந்தது.
Powered by Blogger.