Header Ads

ரஞ்சனின் தொலைபேசி அழைப்பால் மற்றொரு நீதவானுக்கு காத்திருக்கும் ஆப்பு

சர்ச்சைக்குரிய வழக்குகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதன் மூலம் நீதித்துறைக்கு இழுக்கை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் மற்றுமொரு நீதவான் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படும் சாத்தியங்கள் உள்ளதாக நீதித்துறையின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.


ஏற்கனவே ரஞ்சனுடன் உரையாடி வழக்கு விடயங்கள் குறித்து பேசிய காரணத்திற்காக பத்தேகம நீதவான் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டார்.இந்நிலையில் ரஞ்சனுடன் தொலைபேசியில் பேசிய மற்றுமொரு நீதவான் கிஹான் பிலபிட்டியவும் சேவையில் இருந்து இடைநிறுத்தப்படும் சூழ்நிலை எழுந்துள்ளது.

நீதிமன்ற விடயங்களில் அரசியல் தலையீடு இருப்பதாக ஏற்கனவே கிஹான் பிலபிட்டிய நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதால், அதுகுறித்து பரிசீலனை செய்துவரும் ஆணைக்குழு அது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் வரை அவரை சேவையில் இருந்து இடைநிறுத்தக் கூடுமென தெரிகிறது.
Powered by Blogger.