Header Ads

பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன 10 இலட்சம் வாக்குகள் குறைவாகவே பெறும்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கடந்த ஜனாதிவதித் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 10 இலட்சம் வாக்குகள் குறைவாகவே கிடைக்கும் என்று ஐக்கிய தேசிய கட்சி கூறியுள்ளது.


அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இவ்வாறு கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொண்ட வாக்குகள் குறைவடையாமல் தக்கவைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களினதும் பின்னர் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களின் போது ஆட்சிலுள்ள கட்சியின் வாக்குகள் குறைவடைந்துள்ளமையே நடந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது அவர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.
Powered by Blogger.