Header Ads

14 வருட சிதை் தண்டனையின் பின்னர் வைத்தியரான நபர்

இந்திய செய்திகள் - கொலை வழக்கில் கைதாகி, 14 ஆண்டுகளைச் சிறையில் கழித்த பின்னும் சுபாஷ் பாட்டீல்  என்ற இந்த ஆடவர் மருத்துவராக வேண்டும் என்ற தமது கனவை மறக்கவில்லை.


கர்நாடக மாநிலம், கலபுரகியைச் சேர்ந்த 40 வயதான திரு சுபாஷ் கடந்த 1997ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தார்.

ஆனால், மூன்றாம் ஆண்டில் பயிலும்போது கொலை வழக்கில் கைதாகி, பின் 2002ஆம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் வெளிநோயாளி   சிகிச்சைப் பிரிவில் சேவையாற்றிய இவர், நன்னடத்தை காரணமாக 2016ல் விடுவிக்கப்பட்டார்.

அதன்பின் மருத்துவப் பட்டப் படிப்பை தொடர்ந்து பயின்று, கடந்த ஆண்டு சான்றிதழ் பெற்றுவிட்டார். அதன்பின் கட்டாய ஓராண்டு பயிற்சியில் சேர்ந்த இவர், அண்மையில் அதனையும் முடித்து  மருத்துவராகிவிட்டார்.

திரு சுபாஷின் விடாமுயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Powered by Blogger.