Header Ads

சக கைதியின் மனைவியுடன் சிறைச்சாலைக்கு உள்ளிருந்து கள்ளத் தொடர்பை பேணிய கைதி

காலி சிறைச்சாலையிலுள்ள சிறைக் கைதி ஒருவர் அதே சிறைச்சாலையில் உள்ள சக கைதியின் மனைவியுடன் கள்ளத் தொடர்பை பேணி வந்துள்ள நிலையில், இன்று தொலைபேசி மூலம் உரையாடிக் கொண்டிருந்த போது சிறைச்சாலை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.


குறித்த கைதி தனது மனைவியுடன் தொலைபேசியில் உரையாடுவதை அவதானித்த சக கைதி பொலிஸ் அவசர பிரிவுக்கு அழைத்ததையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் குற்றச்சாட்டில் சிறையிலுள்ள குறித்த சந்தேகநபர் போதைப் பொருள் உட்பட பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய கைதியின் மனைவியுடன் தகாத உறவை பேணி வந்துள்ளதுடன், சிறைச்சாலைக்கு உள்ளிருந்தும் தொலைபேசி மூலம் குறித்த பெண்ணுடன் தொடர்பை பேணி வந்துள்ளார்.

பொலிஸார் சிறைச்சாலைக்கு சென்று அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளதுடன், சந்தேகநபருக்கு கைத்தொலைபேசி எவ்வாறு கிடைத்துள்ளது என்பது சம்பந்தமாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Powered by Blogger.