Header Ads

டில்லியில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலில் இதுவரை 38 முஸ்லிம்கள் உயிரிழப்பு

 இந்திய முஸ்லிம்கள் உட்பட  ஈழத்தமிழர்களையும் பெரிதும் பாதிப்பதாக கூறப்படும் இந்திய மத்திய அரசின் புதிய திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


போராட்டக்காரர்களை அடக்குவதற்காக மதவாத வன்முறையாளர்களை வைத்து ஆங்காங்கே பல்வேறு கலவரங்களும் உண்டாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக தலைநகர் டில்லியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் இதுவரை சுமார் 38 முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை முஸ்லிம்களின் உடமைகள் பல சூரையாடப்பட்டும், அழிக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் வருகின்றன.

அஷோக் நகர் பள்ளிவாசல் உட்பட சுமார் 20 மேற்பட்ட பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.