Header Ads

பாலியல் பலாத்காரம் செய்ய வந்த நபரின் மர்ம உறுப்பை வெட்டிய இளம்பெண்

தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆணின் ஆண்குறியை
பாகிஸ்தான் பெண் வெட்டியுள்ள சம்பவம் சர்வதேச ஊடகங்களில் பேசு பொருளாக உள்ளது.


பாகிஸ்தானுக்கு சொந்தமான பஞ்சாபின் ஜரன்வாலாவில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பின்னர் ஒரு ஆணின் ஆண்குறி துண்டிக்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.

24 வயது பெண் ஒருவரே  30 வயது ஆணின் பிறப்புறுப்பை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது வெட்டி உள்ளார்.

அதனை அடுத்து குறிப்பிட்ட பெண்ணின் தந்தை போலீஸ் நிலையம் சென்று சம்பவம் தொடர்பில் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட  நபர் பெண்ணின்  வீட்டிற்கு சென்று தனது இச்சைக்கு அனுமதிக்காவிட்டால் கத்தியால் குத்தி விடுவதாக, கொலை மிரட்டல் விடுத்து அவரை பாலியல் பலவந்தப் படுத்த முயன்றார்.

அவருடன் போராடிய குறிப்பிட்ட பெண் அவரிடமிருந்து கத்தியைப் பிடித்து அவனது ஆண்குறியைத் துண்டித்து உள்ளார், அதன் பிறகு அந்த நபர்  கத்திக்கொண்டு ஓடியதாக , அவளுடைய தந்தை போலீசாரிடம் தெரிவித்ததாக அறிக்கை  கூறுகிறது.

குறிப்பிட்ட பெண்ணிடம் விசாரணைகள் நடைபெற்று வரும் அதேவேளை காயப்படுத்த பட்ட ஆண் சிகிச்சை பெற்று வருவதுடன் அவரிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Powered by Blogger.