சஜித்தை சிக்க வைக்கும் ரணிலின் மற்றொரு திட்டம்
சஜித் கூட்டணியை யானைக்குள் சிக்க வைக்க ரனில் விகரமசிங்க வியூகம் வகுத்துள்ளமை நேற்று முன்தினம் இடம் பெற்ற கட்சி செயற்குழு கூடத்தில் தெளிவாகியுள்ளமை தொடர்பில் சஜித் அணி உறுப்பினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதனை மெய்ப்படுத்தும் வகையில் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட ஹர்ஷ சில்வா கருத்து வெளியிட்டுள்ளார்.
யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என செயற்குழுவில் வலியுருத்தப்பட்டதாக கூறிய அவர் அவ்வாறு செய்தால் ஐக்கிய தேசிய கட்சியினூடாகவே வேட்பு மனு வழங்க வேண்டி ஏற்படும் எனவும் கூட்டணி என்பது வெறுமனே பெயரளவில் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியில் பல கட்சிகள் இணைந்து போட்டியிட்ட போதும் ஐக்கிய தேசிய கட்சியூடாகவே வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
யானை சின்னத்தினை மாத்திரம் புதிய கூட்டணிக்கு வழங்க முடியாது என கூறப்படுகிறது.

Post a Comment