ரணிலும் சஜித்தும் இணைந்து எடுத்துள்ள தீர்மானம்
புதிய கூட்டணியின் சின்னம் உள்ளிட்ட நெருக்கயை தீர்ப்பதற்காக 10 பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
நேற்று (12) இரவு நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது கூட்டணி தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், ரணில் தரப்பில் இருந்து ஐந்து உறுப்பினர்களும், சஜித் தரப்பில் ஐந்து பேரும் அடங்கிய குழு ஒன்றை நியமித்து வெள்ளிக்கிழமை அவர்கள் இறுதி முடிவு எடுக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த கட்சி செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Post a Comment