சரத் பொன்சேகாவின் கிறீன் கார்டை ரத்துச் செய்துள்ள அமெரிக்கா
இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பயண தடையை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது எனவும் இது சம்பந்தமாக நேர்மையாக செயற்படவில்லை என்பதுடன் இதன் அரசியல் இலாபத்தை மாத்திரம் பெற முயற்சித்து வருகிறது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய இராணுவ தளபதி சவேந்திர சில்வா சிறந்த அதிகாரி. அவருக்கு எதிராக தடைவிதிக்கப்பட்டுள்ள நிச்சயமாக எமக்கு அனுமதிக்க முடியாது.
அவருக்கு மாத்திரமல்ல இராணுவத்தை 50 பேருக்கும் மேல் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவுப்படுத்த வேண்டும்.
அந்த தடை எனக்கே முதலில் விதிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதியுடன் அவரது பிரநிதிகளுடன் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் செல்ல முயற்சித்த போது எனக்கு விசா வழங்கப்படவில்லை.
தற்பொழுதும் நான் அமெரிக்காவுக்குள் நுழைய விசா தருவதில்லை. நான் வைத்திருந்த கிறீன் காட்டையும் அமெரிக்க ரத்துச் செய்துள்ளது. இராணுவத்திற்கு கட்டளையிட்ட இராணுவ தளபதி என்ற வகையில் நான் இந்த நிலைமையை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
அந்த நேரத்தில் தற்போது கோஷமிடும், அரசியல் இலாபம் பெற முயற்சிக்கும், முதலை கண்ணீர் வடிக்கும் நபர்கள் எனக்காக குரல் கொடுக்கவில்லை. இது தவறான வேலை. அரசியல் இலாபம் பெற முதலை கண்ணீர் வடிக்கும் நபர்கள் இதனை நேர்மையாக செய்யவில்லை எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment