Header Ads

சமல் ராஜபக்ஷவை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை ​செய்வதாக SMS அனுப்பியவர் சிக்கினார்

அமைச்சர் சமல் ராஜபக்ஷவை கொலை செய்வதாக அமைச்சரின் கைப்பேசிக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பிய நபர் ஒருவர் ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த நபர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ய உள்ளதாக அமைச்சருக்கு அனுப்பப்பட்ட குறித்த குறுந்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதன்போது சந்தேகநபர் ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னரும் இந்த நபரால் இதுபோன்ற குறுந்தகவல்கள் வேறு நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றவியல் பிரிவினரால் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

குறித்த சந்தேகநபர் தற்போதைய நிலையில் தடுப்பு உத்தரவின் பேரில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றவியல் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.