Header Ads

சுதந்திர தினத்தன்று பொது மன்னிப்பு வழங்கும் பட்டியலில் துமிந்த சில்வாவின் பெயர் உள்ளதா?

சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட உள்ளதாக சமூக ஊடகங்களில் வௌியாகியிருந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்று உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


பெப்ரவரி 04ம் திகதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட உள்ள சிறைக்கைதிகளின் பெயர்ப்பட்டியல் சிறைச்சாலைகள் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டுள்ள போதிலும், அதில் துமிந்த சில்வாவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தில் பொது மன்னிப்பு வழங்கப்படுவது சிறு தவறிழைத்த குற்றவாளிகளுக்கே என்றும், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாயின் நீண்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள் ஊடகம் ஒன்றில் இந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு எதிராக தீரப்பு வழங்கிய நீதிபதிகள் தொடர்பில் அண்மையில் வௌியாகியிருந்த தொலைபேசி உரையாடல் பதிவுகள் காரணமாக விமர்சனங்கள் தோன்றியிருந்தமையும் கூறத்தக்கது.

Powered by Blogger.